ரதமர் ஆன பின் பெரும்பாலும் பிரதமர் மோடி குஜராத் செல்வதில்லை. மிகமுக்கியமான அரசு முறைப் பயணங்கள் இருந்தால் மட்டுமே அங்கு போவார்.
ஆனால் கடந்த எட்டாம் தேதி இரவு கருப்பு பண ஒழிப்பில் ஐநூறு ஆயிரங்கள் செல்லாது என அதிரடி அறிவிப்பை அறிவித்து கருப்பு பண பேர்வழிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்தார்.
ஆனால் நீண்ட நாட்களாகவே பிரதமர் இந்த நிலைப் பாட்டில் ஆழ்ந்து கவனம் செலுத்தி இருக்கிறார்.
மிக நம்பிக்கையான ஐந்து பேருக்கு மட்டுமே இந்த சர்ஜிகல் ஆப்ரேஷன் பற்றி தெரியும். அவர்களும் மோடியுடன் தீவிர ஆலோசனையில் தான் இருந்திருகிறார்கள்.
அதற்கு முன்பு தனிப்பட்ட பயணமாக பிரதமர் மோடி இரண்டு முறை குஜராத் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இரண்டு முறையும் தனது அம்மாவை சந்தித்திருக்கிறார். அப்படி சந்திக்கும் போது ” அம்மா நாடு மிகப்பெரிய வேள்விக்கு தயாராகிறது. நான் என் மக்களுக்கு தற்காலிகமாக கொஞ்சம் கஷ்டம் கொடுக்கப் போகிறேன். என் மக்கள் அவதிப்படப் போகிறார்கள்..எனக்கு இது அக்னிப் பரிட்சை” என்று கண்கள் கலங்க கூறினாராம்.
அதற்கு அம்மா தன் பாச மகனை உச்சி முகர்ந்து ஆசி கூறி உனக்கு இறைவன் துணை இருப்பான்..உன் மக்கள் உன்னை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்..என்று கூறி இனிப்பு கொடுத்து அனுப்பி இருக்கிறார்…!
சொன்னது போலவே பாரதப் பிரதமரை மக்கள் புரிந்து கொண்டார்கள்..கொஞ்சம் கொஞ்சமாக நாடு சீரடைகிறது…!
பிரதமர் கனவு நனவாகும் நாள் வெகு தூரம் இல்லை..!