வெளிநாட்டு சுற்றுலா பயணிகளினால் இலங்கை விரைவான வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2016ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக எதிர்பார்க்கப்படுவதோடு, அதனை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 வீத வளர்ச்சியாகும்.
ஒக்டோம்பர் மாதம் வரையில் 1.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அதனை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 14.6 வீத வளர்ச்சியாகும் என இலங்கையின் சுற்றுலாத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் இலங்கையின் மூல சந்தைகளாகும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் உட்பட சர்வதேச வருகையை ஈர்க்கும் வகையில் பல முயற்சிகளை அண்மையில் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
விமான நிலையத்தில் பயணிகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் வகையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் விளைவாக, நாட்டின் ஹோட்டல் தேவை 3.5 சதவீதம் அதிகரித்துள்ளதென 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத தரவுகளை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டுள்ளது.