கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம், மஞ்சேனஹள்ளி, குன்டசிக்கனஹள்ளி கிராமத்தில்,
வசித்து வரும் இளம் பெண் ஒருவரிடம் அதே கிராமத்தை சார்ந்த மதனகோபால் ரெட்டி (36) என்பவர் அடிக்கடி தவறாக நடக்க முயற்சி செய்து வந்தார்.
இது குறித்து இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் மதனகோபால் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவத்திற்கு பிறகும் இளம்பெண்ணுக்கு மதனகோபால் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை.
இந்நிலையில் மாலை வேளையில் அந்த இளம்பெண் தனது வயலில் பசுமாடுகளுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த மதனகோபால், பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார்.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அப்பெண் காமவெறி பிடித்த, மதனகோபாலை மர்ம உறுப்பில் எட்டி உதைத்தார்.
அதில், மதனகோபால் சுருண்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.