40 ஆண்டுகளாக சிவப்பு நிற உடைகளை அணிவதுடன், அதேநிறத்திலான பொருள்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற பெண் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
போஸ்னியாவை சேர்ந்த 67 வயதாகும் பெண் ஒருவரே இவ்வாறு வாழ்ந்துவருகிறார்.
இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
ஜோரிகா ரெபர்நிக் ((Zorica Rebernik)) என்ற அந்தப் பெண், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட வீட்டில் சிறப்பு நிற காலணி, இருக்கை, மேஜைகள் உள்ளிட்ட சிவப்பு நிற பொருள்களுக்கு மத்தியில் கணவர் ஜோரனுடன் வாழ்ந்து வருகிறார்.
இருவரும் சிவப்பு நிற பிளேட்டுகளில் உணவு சாப்பிடுவதுடன், நீர் அருந்துவதற்கு சிவப்பு நிற கோப்பைகளை பயன்படுத்துகின்றனர். தூங்குவதற்கு சிவப்பு நிற படுக்கைகளை பயன்படுத்துகின்றனர்.
தலை முடியின் நிறத்தையும் சிவப்பு வண்ணத்தால் ஜோரிகா அழகுபடுத்தியுள்ளார். சிவப்பு நிறம் மீதான ஜோரிகாவின் விருப்பத்தை புரிந்து கொண்ட அக்கம் பக்கத்தினர், அவருக்கு அதே நிறத்திலான பொருள்களை பரிசாக அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
திருமணத்துக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த அழகிய சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்ட உடைகளை ஜோரிகாவும், ஜோரனும் அணிந்திருந்தனர். இதேபோல் தங்களது கல்லறைகள் மீது வைக்க சிவப்பு நிற நடுகல்லை ஜோரிகா வாங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.