சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பாட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழ் மாணவியொருவர்.
தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒட்டன்சத்திரம் காந்திநகரைச் சேர்ந்த பாண்டி – பத்மாவதி தம்பதியின் மகள் பிரதீபா, பள்ளிப் பருவத்தில் இருந்தே சிலம்பாட்டத்தில் ஆர்வம் கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
பழனியைச் சேர்ந்த வேங்கைநாதன் என்பவரிடம் சிலம்பம் கற்ற பிரதீபா, மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.
கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் 18 வயது மாணவ, மாணவிகளுக்கான சிலம்பாட்ட பிரிவில் கலந்துகொண்டு விளையாடிய பிரதீபா, முதலிடம் பிடித்து, தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவிக்கு தமிழக மக்கள் தங்களை பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.