கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் தொழிலாளி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் விளக்கமறியல் இம்மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து பதில் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி வெலிகம் பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போனதாக காவல்துறைக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்த போது, மேற்படி பெண்ணை கொலை செய்து அவரது உடற் பாகங்களை கழிப்பறை குழியில் கொட்டியிருந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.