ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை பணிக்கு 1960 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு செய்துவரும் இலங்கைக்கு நியாயத்தை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொது அமர்வின் ஐந்தாவது குழு கூட்டத்தில் இலங்கை குழுவின் பிரதிநிதியான, கனடாவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் சித்தாரா கான் ளுiவாயசய முhயn இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பல உள்ளுர் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய நிலையிலும், இன்றுவரை இலங்கை உரிய முறையில் மதிப்பீடுகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்நோக்குவதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் மூலம் மட்டுப்படுத்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளன.
இருப்பினும் உறுப்பு நாடுகளிடம் இருந்து பெறப்படும் வளங்களை திறமையுடனும் பக்க சார்பற்ற நிலையிலும், வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது, செயலாளர் நாயகம் வழங்கிய சில உறுதிப்பாடுகளுக்கு இலங்கை பிரதிநிதிகள் தமது பாராட்டை தெரிவித்தனர்.
குறிப்பாக கையிலிருப்பில் உள்ள நிதிக்கு அமைய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு படையணி மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு அவர் உறுதியளித்துள்ளார்.
இது தவிர, அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றை வழங்க உறுதியான செயல்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.