கிண்ணியாவில் தனது பிள்ளையை கர்ப்பமாக்கியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
39 வயதுடைய தந்தை ஒருவர் தனது 15 வயதுடைய புத்திக்கூர்மை குறைந்த மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தெரியவந்துள்ளது.
இம் முறைப்பாட்டையடுத்து கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி கபில கால்லகே தலைமையில் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தனது மகளை தந்தையே கர்ப்பமாக்கியமை தெரிய வந்துள்ளது.
அத்துடன், 15 வயதான குறித்த பெண் பிள்ளையின் வயிற்றில் கர்ப்பம் தரித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் நேற்றைய தினம் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது, குறித்த சந்தேகநபரான தந்தையை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் , வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.