அவுஸ்திரேலியாவில் 113 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்த விடயம் உலகெங்கிலும் வாழ் பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் 2007 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சூசன் கியிஃபெல் (Susan Kiefel) அடுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
62 வயதுடய சூசன் கியிஃபெல், ஜனவரி முதல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடமையாற்றுவார் என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்துள்ளார். சூசன் 15 வயதிலேயே உயர் கல்வியை முடித்துக்கொண்டவர் என்பது சிறப்பம்சமாகும்.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாலும் சூசன் கியிஃபெல்லே முதல் பெண் தலைமை நீதிபதி என அவுஸ்திரேலியாவின் பிரதமர் கூட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்,1993 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் சூசன் கியிஃபெல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மிக சிறந்த நீதித்துறை அதிகாரிகளில் ஒருவராகவும் சூசன் கியிஃபெல் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.