இலங்கையின் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் சீன அதரவு கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, ஐதேகவின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார்.
அடுத்த மாதம் இந்த தேர்தலின் முடிவு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்தியாவின் பிரசன்னத்தின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கும்.
அதிபர் தேர்தலில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதானமான போட்டி சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில் தான் இருக்கிறது.
கோத்தபாய ராஜபக்ச சீன ஆதரவுபெற்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் ஆவார்.
சஜித் பிரேமதாச ஒரு எதிர்பாராத வெற்றியாளராக வரக் கூடும். அவர், ஆர்ப்பாட்டம் இல்லாதவராக இருப்பதுடன், எந்த சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாதவராக இருக்கிறார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் கால்பங்கை கொண்ட சிறுபான்மையினர் மற்றும் கிராமப்புற மக்களின் செல்வாக்கை பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் அரசியல் நெருக்கடியின் போது, அதிபர் சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், சுமுக நிலையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்தார் என்றும் இந்தியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.