இந்நாட்டின் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் பெண்கள் சமூகத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கையொப்பமிடுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்நாட்டின் சனத் தொகையில் 51% வீதமுள்ள பெண்கள் சமூகத்தை பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் இன்று கையொப்பமிடப்பட்டது. சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பல்வேறு காரணங்களுக்காக பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய அநீதிகளை இல்லாமல் செய்து இந்நாட்டின் பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக்க இன்று வெளியிடப்படும் கொள்கையை, தான் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களுக்கும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து குறித்த சட்டத்தை அமுலாக்குவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.