கனடாவின் 43 ஆவது பொதுத் தேர்தல் இன்று 21 ஆம் திகதி திங்கள்கிழமை நடைபெறுகின்றது.
கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.
இன்றைய தேர்தலில் கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளுமே தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேவையான 170 இடங்களை வெல்வது கடினம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
கருத்துக்கணிப்பின்படி ஜஸ்டினின் லிபரல் கட்சி 137 தொகுதிகளையும், ஆண்ட்ரூ ஷீர் தலைமையிலான கென்சர்வேட்டிவ் கட்சி 125 இடங்களையும், புளக் கியூபெக்வா கட்சி 39 இடங்களையும் மற்றும் ஜக்மித் சிங் தலைமையிலான நியூ டெமாகிரட்டிக் கட்சி 34 இடங்களையும் வெல்லும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவரும் கென்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவரும் கனேடிய மக்கள் சார்பில் ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.