இன்றைய தேதி வரை பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திசண்டை’ ஆகிய படங்கள் ரிலீசாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த போட்டியில் சந்தானமும் களமிறங்கியுள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ படம் பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.
சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி ஷிந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே விஜய் படமும், விஷால் படமும் இரண்டு முறை பொங்கலுக்கு நேரடியாக மோதியுள்ளது. இந்த முறை மூன்றாவது முறையாக வரும் பொங்கலுக்கும் இவர்கள் படம் போட்டியாக களமிறங்கும் நிலையில், சந்தானமும் படமும் களத்தில் குதித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.