Loading...
சிலி நாட்டில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் அரச எதிர்ப்பு போராட்டங்களின் ஒரு கட்டமாக அரசாங்கத்துக்கு சொந்தமான துணிதொழிற்சாலை ஒன்றுக்கு தீவைக்கப்பட்டதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
தொடருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போராட்டங்களால் தலைநகர் சண்டியாகோ உட்பட்ட பல நகரங்களில் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
Loading...
போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கபட்ட தொடருந்து கட்டண உயர்வை மீளெடுப்பதாக அரசதலைவர் செபாஸ்டியன் பினெரா அறிவித்த போதிலும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது .
Loading...