அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் 5 பேர் கொண்ட மொத்த குடும்பத்தையும் உயிருடன் எரித்து கொன்ற சிறுவனுக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது நீதிபதி கூறிய வார்த்தைகள் தமக்கு புரியவில்லை எனவும், அதற்கு விளக்கம் வேண்டும் எனவும் சிறுவன் கேட்டுள்ளான்.
இதனையடுத்து, அவனுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவன் Kyle Alwood கண்கலங்கியுள்ளான்.
9 வயதான சிறுவன் Kyle Alwood தமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை மொபைல் குடியிருப்புக்கு நெருப்பு வைத்து உயிருடன் எரித்து கொலை செய்துள்ளான்.
இந்த வழக்கில் சிறுவனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என கூறப்படுகிறது.
5 ஆண்டுகள் நன்னடத்தை சோதனை காலமாக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த மாத துவக்கத்தில் சிறுவனின் தாயார், தமது மகன் கொடூர எண்ணம் கொண்டவன் அல்ல எனவும், அவனது செயலை தாம் மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.