ரஷ்யாவில் கடற்கரை ஒன்றில் வைத்து பசியால் வாடிய கரடி கூட்டத்திடம் சிக்கி இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குற்றுயிராக மீட்கப்பட்ட 36 வயது அலெக்ஸி இவனோவ்ஸ்கி தற்போது மருத்துவர்களால் கைவிடப்பட்டுள்ளார்.
இருப்பினும் மருத்துவ உதவிக் குழுவினரால் புத்துயிர்க் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரடிகள் கூட்டம் தாக்கியதில் அலெக்ஸி இவனோவ்ஸ்கியின் உச்சந்தலையின் தோல், அவரது முதுகு மற்றும் பின்புறம் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது.
அவரது காது ஒன்று கடித்து குதறப்பட்டுள்ளது. கால் ஒன்று துண்டிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 250 மைல்கள் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தற்போது கோமா நிலையில் இருக்கும் அவரை சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.
இவனோவ்ஸ்கி கடற்கரையில் நண்டுகள் சேகரித்தபடி இருந்த நிலையிலேயே பழுப்பு நிற கரடிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
கொடூரமாக தாக்கிய கரடிகளை பொதுமக்கள் கல்லால் அடித்து துரத்தியுள்ளனர். இதில் கரடி ஒன்று தாக்கியதில் 37 வயதான நபர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.