கனடாவின் North York பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 5 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில், குறித்த சாரதிக்கு விதிக்கப்பட்ட தண்டனை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த விவகாரத்தில் குறித்த சாரதி குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமானதை அடுத்து ஒன்ராறியோ நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின்படி அவருக்கு அதிகபட்ச தண்டனையாக 100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 5 வயது சிறுமி Camila Torcato மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரும் செயின்ட் ரபேல் கத்தோலிக்க பாடசாலையில் வைத்து, தங்கள் காருக்குள் ஏற முயற்சித்துள்ளனர்.
குறித்த பாடசாலையிலேயே சிறுமி Camila Torcato கல்வி பயின்று வருகிறார்.
அப்போது எதிர்பாராத வகையில், Hyundai SUV ஒன்று தானே நகர்ந்து வந்து இவர்கள் இருவர் மீதும் பலமாக மோதியுள்ளது.
இதில், 3 வயது முதலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி Camila Torcato குற்றுயிராக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் மரணமடைந்தார்.
அந்த விபத்தில் சிக்கிய சிறுமியின் தந்தை காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகத்தின் சாரதி 37 வயதான Luana Brambila குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தற்போது 100 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அவர் parking brake பயன்படுத்தவில்லை எனவும், அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்தது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த விபத்துக்கு பின்னர் தங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது எனவும்,
இனிமேலும் அது பழைய நிலைக்கு திரும்பாது எனவும் சிறுமி Camila Torcato-ன் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.