Loading...
அந்த காலத்தில் நமது முன்னோர்கள் நமக்கு கற்பித்தது, செய்வித்தது அனைத்துமே நல்லவை மட்டுமே.
உறவுகளில் இருந்து உணர்வுகள் வரை மட்டும் அல்ல, உணவுகளிலும் கூட அவர்கள் நமக்கு நல்லதை கற்பித்துள்ளனார்.
Loading...
நாம் தான் அதை மறந்துவிட்டோம். இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது.
அவித்த உணவு சிறந்த காலை உணவு
- காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது.
- அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது.
- ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது.
- இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
- அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும்.
- எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
- இதேவேளை, ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- எனவே, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை கையாளுங்கள்.
Loading...