பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது.
ஆனால் இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. ஏனென்றால் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து, கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.
நன்மைகள்
நோயெதிர்ப்பு சக்தி
அன்னாசியில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும். இதனால் உடலில் நோய்களின் தாக்கம் குறையும்.
செரிமானம்
செரிமான பிரச்சனை இருந்தால், ஒரு கப் அன்னாசிப் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் உடனே உங்கள் செரிமான பிரச்சனை நீங்கும்.
சளி மற்றும் இருமல்
அன்னாசியில் வைட்டமின் சி, புரோமெலைன் போன்றவை அதிகம் இருப்பதால், இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்துப் போராடும். அதிலும் சளி, இருமல் போன்றவற்றின் போது அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஆர்த்ரிடிஸ்
அன்னாசிப்பழத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதால், இதனை ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் உட்கொண்டு வந்தால் மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, மூட்டுகள் வலிமையடையும்.
புற்றுநோய் எதிர்ப்பு பொருள்
அன்னாசிப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படும்.