பொலநறுவை ஹிங்குரக்கொட – கிம்புலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மரத்தின் உச்சியில் இருந்து தேன் போன்று திரவம் ஒன்று வடிவதாக தெரியவந்துள்ளது.
வீடு ஒன்றிலுள்ள வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து இந்த திரவம் வடிகிறதாகவும், நாளாந்தம் மரத்தின் உச்சியில் இருந்து இடைவிடாமல் தினமும் பெருமளவு வடிவதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த சில தினங்களாக நீர்வீழ்ச்சி போன்று வேப்ப மரத்தில் இருந்து வடிவதனை தாம் அவதானித்ததாக கூறிய அவர், அதன் வாசனை கிராமம் முழுவதும் வீச ஆரம்பித்ததாதவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த திரவம் தொடர்பில் ஆராய்ந்த போது அது தேனை விடவும் மிகவும் சுவையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விடத்திற்கு தேனீக்கள் அதிகமாக வருவது வழக்கம் எனினும், கசப்பான வேப்ப மரத்தில் இருந்து தேனை விடவும் சுவையான தேன் கிடைப்பது அதிசயமான விடயம் ஆகும்.
இந்நிலையில் அதனை தாம் அபூர்வ சம்பவமாகவே பார்க்கின்றோம் எனவும் , இந்த மரத்தைப் பார்வையிட கிராம மக்கள் நாளாந்தம் வந்து செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.