குடும்ப ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதி தருணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காணப்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹிருணிகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , ஜனநாயக நாட்டுக்கு சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவர் அவசியமா? என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக துமிந்த சில்வா இருந்த காலத்திலேயே கொலன்னாவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரம் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும், அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலமுறை அறிவித்தும் அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் ஹிருணிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ முன்பாக, தான் அமர்ந்திருந்த போதுதான், தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவுக்கு முடிவு கட்ட வேண்டுமென கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாக , குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வழங்கியிருந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களை கொலைச் செய்யும் எண்ணம் ராஜபக்ஷர்களை தவிர வேறெவருக்கும் இருக்கவில்லை என்றும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா, இத்தகையவர்களிடமிருந்து நாட்டை மீட்பதற்கான இறுதித் தருணம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.