ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் 2015 ஆம் ஆண்டின் பொது தேர்தலுக்கு பின்னரான நாட்களில் ஹிஸ்புல்லாவினுடைய ஆதரவாளர்களினால் தாக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் போது,
ஒரு இடத்தில் சஹ்ரானும் காணப்படும் காணொளி பொதுஜன பெரமுனவின் (மொட்டு) காத்தான்குடி அமைப்பாளர் MSM. சியாத் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு அருகில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டவுடன் தொலைகாட்சி ஒன்றிலும் இணையத்தளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் போன்றவற்றிலிருந்து நேற்றைக்கு முந்திய தினமிருந்து சத்தமில்லாமல் அகற்றப்பட்டுள்ளது.
அப்பாவி நாட்டுப்புற சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைமைகளையும் தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டி அதனூடாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை பரப்பி சிங்கள வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வர நினைக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) கோர முகம் இப்போது வெளிவந்துள்ளது.
தம்மோடு இருப்பவர் யாரும் தீவிரவாதிகளாக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை.
ஆனால், தங்களுக்கு எதிர் முகாமில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு தீவிரவாதிகளோடு தொடர்பு இல்லாதுவிடினும் தீவிரவாதிகளாக காட்டப்படுவார்கள் என்ற பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பாஷிச அரசியல் முகத்திரை இப்போது கிழிந்திருக்கிறது.
பொதுஜன பெரமுனவின் (மொட்டு) காத்தான்குடி அமைப்பாளர் MSM. சியாத் – சஹ்ரானுக்கு அருகில் இருக்கிறார் என்று படத்தோடு சுட்டிக்காட்டப்பட்டதும் எவ்வளவு வேகமாக குறிப்பிட்ட காணொளியை கிளிப் நீக்கப்பட்டுள்ளது என்பது இவர்களின் இரட்டை வேடத்தை தெளவாக புரிந்துகொள்ள மிகச்சிறந்த அத்தாட்சியாகும்.
ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னரான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களை பாதுகாப்பதிலும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்வதிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்களை முறியடிப்பதிலும் முஸ்லிம்களை பேரழிவுகளிலிருந்து பாதுகாக்க கூட்டாக இராஜினாமா செய்வதிலும்,
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் செய்த காத்திரமான பங்களிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவரை தீவிரவாதியாக சித்தரிக்க முனைந்தர்களின் முகத்தில் கரிபூசும் வண்ணம் பொதுஜன பெரமுனவின் (மொட்டு) காத்தான்குடி அமைப்பாளர் MSM. சியாத்தை சஹரானுக்கு அருகில் கொண்டு வைத்து தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களை காப்பாற்றி இருக்கிறான்.
இப்போது பொதுஜன பெரமுனவின் (மொட்டு) காத்தான்குடி அமைப்பாளர் MSM. சியாத் தீவிரவாதி என்றால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தீவிரவாதி.
பொதுஜன பெரமுனவின் (மொட்டு) காத்தான்குடி அமைப்பாளர் MSM. சியாத் தீவிரவாதி இல்லை என்றால் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் தீவிரவாதி இல்லை.
இந்த அற்புதமான சமன்பாட்டை அல்லாஹ் உண்டாக்கி இருக்கிறான்.
அல்லாஹ் சமன்பாடுகளை சரி செய்வதில் வல்லவன். மொட்டு தோல்விக்கு இனி தயாராக இருக்கட்டும் என்ற செய்தி இதில் உண்டு. அல்லாஹ் நேசிக்கும் முஸ்லிம் உம்மாவின் மீது ஏறி நின்று அதிகாரத்தை பெற நினைப்போரை அல்லாஹ் விட மாட்டான்.
மொட்டுவின் தோல்வி இதிலிருந்து ஆரம்பித்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.எல்.தவன் அவர்கள் பதில் குறிப்பிட்டுள்ளார்.