ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க சிறப்புக் குழுவினர் கடந்த 10 மணி நேரமாக போராடி வரும் நிலையில், தற்போது ஐஐடி வல்லுனர்கள் குழு குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.
ஐஐடி வல்லுனர்கள் கொண்டுவந்துள்ள அந்த தொழில்நுட்பக் கருவியானது 15 கிலோ எடை கொண்ட ஒரு உருளை வடிவ தொழில் நுட்ப கருவி ஆகும்.
அதன் மூலமாக உள்ளே ஆக்சிஜன் கொண்டு செல்வதோடு கமெரா, மைக் போன்றவைகளும் கொண்டு செல்லப்பட்டு குழந்தையின் நிலை குறித்து ஆராய முடியும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கருவி மூலம் குழந்தையின் குரலைகளை பதிவு செய்யவும், குழந்தையை மீட்கவும் முடியும் என ஜஜடி குழு தெரிவித்துள்ளது.
ஆழ்துளை கிணற்றில் குழந்தை தொடர்ந்து உள்ள சுவாதித்து வருவதாக வெங்கடேஷ் குழுவினர் கொண்டுவந்த நவீன கருவி முலம் கண்டுபிடக்கப்பட்டுள்ளது. குறித்த கருவியின் மூலம் மீட்க நம்பிக்கையுடன் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.