ஜனாதிபதி மைத்ரிபால ,ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை நடுநிலையாக செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இரு முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்க்கமாக செயல்பட முடிவு செய்துள்தாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய தற்போது ஜப்பானிற்கு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார்.
அதன் பின்னர் அவர் ஒரு வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களில் நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஜனாதிபதிக்கு பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் குறித்த அறிக்கையை கவனத்தில் கொண்டு அவர் தனது ஆதரவை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி ஆதரவு வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை எனினும் மைத்ரிபால சிறிசேன தேர்தல் களத்தில் இறங்கும் போது தென்னிலங்கை அரசியல் அரங்கம் நிச்சயமாக சூடுபிடிக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.