தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறும் மாணவர்களின் தொகை இவ்வருடம் முதல் ஐந்தாயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் புலமைப்பரிசிலை வழங்க ஏற்பாடாகியுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
அதில்,
கடந்த வருடம் வரை 15 ஆயிரம் மாணவர்கள் மாத்திரம் தரம் 5 புலமைப்பரிசிலைப் பெற்ற நிலையில், இந்த வருடம் முதல் இந்த எண்ணிக்கையை 20 ஆயிரம் வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அவர்களில் 19,750 மாணவர்களுக்கு பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் அவர்களிற்கு புலமைப்பரிசில் வழங்கப்படும்.
அதேவேளை, 250 விசேட தேவையுள்ள மாணவர்களுக்கும் இந்தப் பரீட்சையில் தோற்றியதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசிலை அவர்களிற்கும் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன்படிபுலமைப்பரிசில் கொடுப்பனவை 500 ரூபா முதல் 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.