ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுஜித் உடல் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்து காணப்பட்டு இருக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித்தின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.
குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரம் நடந்த போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. 88 அடி ஆழத்தில் இருந்து நேற்று இரவு சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் கிராமத்திலேயே தற்போது சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழந்தை சுஜித்தின் உடல் சில இடங்களில் மிக மோசமாக சிதிலம் அடைந்து இருக்கிறது. 80 மணி நேரம் கீழே இருந்ததால் உடல் சிதிலம் அடைந்துள்ளது. சுஜித்தை மீட்பு படை ஏர் லாக் மூலம் பிடித்து வைத்து இருந்தனர்.
2 நாட்களாக ஏர் லாக்கில், 88 அடியில் சுஜித் பிடித்து வைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் உடலின் கீழ் பகுதியில் சில இடங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. கால்கள் சிதிலம் அடைந்து இருந்தது என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். முகத்தில் காயங்கள் எதுவும் பெரிதாக இல்லை. முகம் நல்ல நிலையிலேயே காணப்பட்டது. உடலில் கீழ் பகுதிதான் பாதிக்கப்பட்டு இருந்தது.
உடலில் சில பாகங்கள் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் உடலை போர்த்தியபடி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். சுஜித் உடலை வெளியாட்கள் யாரிடமும் காட்டாமல் எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் வைத்து சுஜித் உடல் அவரின் பெற்றோருக்கு மட்டும் காட்டப்பட்டது.
இதையடுத்து சுஜித்தின் சிதிலம் அடைந்த உடலில் பிரேத பரிசோதனை இன்று அதிகாலை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது சுஜித்தின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் ஒரு கை, கயிறு கட்டப்பட்டு இருந்ததால் உடைந்து காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில பாகங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை எப்போது இறந்தது என்பது குறித்த விவரங்களை மருத்துவர்கள் வெளியிடவில்லை.