வீட்டைவிட்டு வெளியேறிய கணவனை மீண்டும் திரும்பி வர செய்வதற்காக, மனைவிக்கு காமசூத்திரா பயிற்சியளித்த மந்திரவாதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மந்திரவாதியிடம் சொற்படி கேட்டு, 3 நாள் காமசூத்திரா பயிற்சியில் ஈடுபட்டும், கணவன் திரும்பி வரவில்லையென்பதால் பெண்ணொருவர் வழங்கிய முறைப்பாட்டிலேயே, மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டைவிட்டு சென்றவர்களை திரும்பி வர செய்வது, குழந்தைப் பாக்கியம், பிரிந்த காதல் ஜோடிகளை மீண்டும் ஒன்றுசேர வைத்தல் ஆகியன செய்யப்பட்டும் என விளம்பரப்படுத்தி, கல்லா கட்டி வந்த மந்திரவாதியே சிக்கியுள்ளார்.
வட்டேகம பதில் நீதிவான் அவரை, இம்மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
73வயதான, 3 பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
42 வயதான பெண்ணொருவரே முறைப்பாட்டு செய்திருந்தார்.
அந்தப் பெண்ணின் கணவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். மனைவியுடனான தொடர்பை துண்டித்த பின்னர், கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அண்மையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர சுவரொட்டியொன்றை கண்டார். அது மந்திரவாதியின் விளம்பர சுவரொட்டி.
அதில், வீட்டை விட்டு ஓடிச் சென்றவர்களை இரண்டு வாரங்களிற்குள் திரும்பச் செய்வேன் என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மந்திரவாதியிடம் சென்ற பெண், தனது குறைகளை தெரிவித்தார். கணவனை திரும்பி வர செய்வதற்கு, அந்த பெண் 3 நாள் காமசூத்திரா பயிற்சியில் ஈடுபட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெண்ணின் தொலைபேசி இலக்கம், 13,000 ரூபா பணம் ஆகியவற்றையும் பெற்றார்.
சிலநாளின் பின்னர் பெண்ணை தொடர்பு கொண்ட மந்திரவாதி, மாலை 6 மணிக்கு காமசூத்திரா பயிற்சிக்காக தனது இருப்பிடத்திற்கு அழைத்துள்ளார்.
பெண்மணி அங்கு சென்றதும், ஆலயத்திற்கு அழைத்து சென்று, அதன் கதவுகளை மூடி, பெண்ணை உள்ளாடையுடன் நிற்க வைத்துள்ளார். அதன்பின்னர், அந்த பெண்ணை பாலியல்ரீதியாக சித்திரவதைக்குள்ளாக்கி, உல்லாசம் அனுபவித்துள்ளார். இறைவன் கட்டளையிட்டபடி, அவள் கடவுளுடன் இந்த காரியத்தில் ஈடுபட வேண்டுமென மந்திரவாதி குறிப்பிட்டுள்ளார். மூன்றுநாள் அந்த பெண் அங்கு தங்கியிருந்தார்.
எனினும், குறிப்பிட்ட காலஎல்லையில் அவரது கணவன் திரும்பி வரவில்லை. இதையடுத்த, பொலிசாரிடம் அந்த பெண் முறைப்பாடளித்தார். இதனடிப்படையில் மந்திரவாதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் மற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.