கனடாவில் பல்பொருள் அங்காடிக்கு வந்த ஒரு பெண், ஆசியாவை சேர்ந்த பெண் ஊழியரிடம் இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
பிரிட்டீஸ் கொலம்பியாவின் வான்கூவர் நகரில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், அங்காடிக்கு வரும் பெண்ணொருவர் ஆசிய பெண் ஊழியரிடம், கனடாவில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், நீ சீன மொழியில் பேசக்கூடாது என கூறி சண்டை போட்டார்.
இதோடு இனவெறியை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைகளாலும் ஊழியரை திட்டினார். இதையடுத்து அங்கு வந்த சக ஊழியர்கள் அப்பெண்ணை கடையிலிருந்து வெளியில் போன சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களையும் அப்பெண் கோபத்துடன் திட்டியபடி இருப்பது போல வீடியோவில் உள்ளது.
இந்த வீடியோவை வெளியிட்ட ஆலென் திஷிங் கூறுகையில், 2019ஆம் ஆண்டிலும் இது போன்ற இனவெறி தாக்குதல் வான்கூவரில் நடப்பது வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.
இது குறித்து பல்பொருள் அங்காடியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நடந்த விடயம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது, தேவைப்பட்டால் எங்கள் ஊழியர்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவோம் என கூறியுள்ளார்.