நண்பர்களிடம் பந்தையம் கட்டி 89 அடி உயரத்தில் இருந்து கடலில் குதித்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
நார்வே நாட்டில் மோஸ் என்ற இடத்தில் நீர் தொடர்பான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது எமில் லிபெக் என்ற இளைஞர் ஒருவர் அதிகமான உயரத்தில் இருந்து கடலில் குதிக்க நண்பர்களிடம் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுமார் 89 அடி உயரம் கொண்ட கண்டெய்னர் கிரேனில் இருந்து குதிக்க முடிவெடுத்துள்ளார்.
முதலில் தலைகீழாக குதிக்க முயற்சித்துள்ளார். பின்னர் வேகம் காரணமாக நடுநாயமாக கடலில் குதித்துள்ளார். இந்த விபரீத பந்தையத்தில் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி இளைஞர் உயிர்தப்பினார். இந்த முயற்சி நீர் விளையாட்டு போட்டியை விளம்பரபடுத்தும் வகையில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
http://lankapuri.com/wp-content/uploads/2019/10/BFM1a.caa_.1.mp4?_=1