சிறைக் கைதிகளின் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படக்கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இடப்பற்றாக்குறை காரணமாக கைதிகளுக்கு போதியளவு இடவசதிகள் கிடையாது எனவும் இதனால் தொற்று நோய்கள் கைதிகள் மத்தியில் பரவி வருவதாகவும் மருத்துவ பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலைகளில் மிகவும் அதிக எண்ணிக்கையிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், காச நோய் மற்றும் குஸ்ட நோய் போன்ற அதிகளவில் கைதிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு காச நோய் தொடர்பிலான பரிசோதனை நடாத்தப்பட்டு வருகின்றது.
மருத்துவர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் இந்த பரிசோதனை நடாத்தப்பட்டு வருவதாக தேசிய காச நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் காந்தி ஆரியரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.