முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை துப்பரவு செய்த போதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில் த.வி.பு 055 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச ரீதியில் இதுபோன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகளை கடல்வழி பயணங்களின் போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் தரை மற்றும் கடல்வழி பயணத்தின்போது மற்றும் ஈரூடாக தாக்குதல் இலக்குகளின் கணிப்பீட்டை பெறுவதற்கும் குறித்த கருவிகளை பயன்படுத்தி இருக்கலாம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.