கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்த கணவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனைவி கணவனை வெட்டிக் கொலை செய்த செயல் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் திருச்செந்தூர் அருகே உள்ளது நடுநாலுமூலைக்கிணறு புதுகாலனி. இப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி மாடன். 36 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி.
இவரது மனைவி சாந்தி. இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களு க்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்ளனர். இதனிடையே அங்கு பணி புரியும் சாந்திக்கும், முடிசூடும் பெருமாள் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது.
இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது சங்கிலிமாடனுக்குத் தெரியவந்தது. மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கணவனின் பேச்சைக் கேட்பதாக இல்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு சங்கிலிமாடன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தது மனைவி சாந்தி தான் என பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணையின்போது சாந்தி பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், எனக்கும் முடிசூடும் பெருமாள் என்பவருக்கும் தொடர்பு இருந்தது கணவர் என்னை கண்டித்தார்.
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவிலும் சங்கிலிமாடன் என்னிடம் இத் தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது எனது கணவர் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் உறங்கச் சென்று விட்டார். உறங்கப் போகும்போது தலையணைக்குக் கீழ் அவர் அரிவாளை பதுக்க வைத்ததைப் பார்த்து விட்டேன்.
என்னைக் கொல்லத் தான் அவர் வைத்ததாக கருதி இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தேன். நள்ளிரவைத் தாண்டியதும், எழுந்து அந்த அரிவாளை எடுத்து கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தேன் என சாந்தி தெரிவித்துள்ளார்.