ஐசிசி-யின் ஆண்கள் டி-20 உலகக் கோப்பை எதிர்வரும் 2020ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
7வது ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டிகள் முதன் முறையாக அவுஸ்திரேலியாவில் 2020 அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவுள்ளன.
இதில், விளையாடும் 16 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன் படி, வங்க தேசம், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமான் ஆகும்.
நமீபியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை அடுத்த ஆண்டில் தங்கள் முதல் ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளது.
2007ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் டி-20 உலகக் கோப்பையை இந்தியா(2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), மேற்கிந்திய தீவுகள் (2012, 2016), இலங்கை(2014) ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.