Loading...
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு மர்ம நபரகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்குமென ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Loading...
முன்னாள் அதிபரின் பெயருக்கு அந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததால், அவரது வீட்டுக்கே கடிதம் சென்றிருக்கிறது. கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்னாள் அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Loading...