சிலரது காதின் மடல் பகுதியில் சிறிய கோடு அல்லது அறுத்தது போன்ற குறி இருக்கும். இது பிறக்கும் போதே இருக்காது. திடீரென்று தான் தோன்றும்.
பெரும்பாலும் வயது முதுமை அடையும் போது இது தோன்றுவதை காணலாம்.
சிலருக்கு இளம் வயதிலேயே கூட தென்படலாம். இந்த அறிகுறி ஏன் தென்படுகிறது? எதனால்? இதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய அபாயம் என்ன என்பது பற்றி இனிக் காணலாம்.
ஃபிரேன்க் மருத்துவர் இதை பற்றி 1973-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதனால், இதை ஃபிரேன்க் அறிகுறி என்றே மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது.
இந்த அறிகுறி பெருந்தமனி தடிப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதை குறிக்கிறது.
ஆய்வு!
இதைப்பற்றி தெளிவாக கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஓர் ஆய்வில் காதில் இந்த குறி இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இரு பிரிவார பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. க்ரூப் எ, க்ரூப் பி என 60 நபர்களை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
இரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களினால் தான் காது மடல் பகுதியில் இந்த ஃபிரேன்க் அறிகுறி உருவாகிறது. இந்த அறிகுறி தென்படுவதை வைத்து உங்கள் இதயம் பலவீனம் ஆகிவருவதை கண்டறியலாம்.
வளர்ச்சி கோளாறு, பெக்வித்தை- வைடெமன் (Beckwith-Wiedemann) நோய் மற்றும் மரபியல் காரணிகளால் கூட காது மடல் பகுதியில் இந்த அறிகுறி தென்படலாம்.
எச்சரிக்கை!
எனவே, உங்கள் மருத்துவரிடம் சரியான இடைவேளையில் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரிப் பார்த்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் ஆரம்பக் கட்டத்திலேயே இதய பாதிப்பு இருந்தால் கண்டறிந்து சரிசெய்துவிட முடியும்.