கிழக்கு மாகாண ஆதிவாசிகளின் தலைவர் உட்பட ஆதிவாசிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
அம்பாறை ஆதிவாசிகளின் தலைவர் ரம்பகென்ஓய பொல்பெத்த கிராமத்தின் ஆதிவாசி தலைவர் மஹா பண்டாரலாகே அப்பு உட்பட ஆதிவாசிகள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொழும்பு வோக்சோல் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்திற்கு வந்த இவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க வரவேற்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமது ஆதிவாசி பரம்பரை பற்றி தேடி தேவையான வசதிகளை பெற்றுக்கொடுத்ததாகவும் இதனடிப்படையில், சஜித் பிரேமதாசவும் தமது மக்களின் தேவைகள் பற்றி அறிந்திருப்பார் எனவும் ஆதிவாசிகளின் தலைவர் பண்டாரலாகே அப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.