நாட்டின் புதிய தலைவரை தேர்வு செய்ய இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அமெரிக்காவுடன்மில்லினியம் செலஞ்ச் கோப்பரேஷன் ஒப்பந்தத்தை அரசாங்கம் மேற்கொண்டமையை அனுமதிக்க முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாட்டில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததன் பின்னணியில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது சந்தேகத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலமே அவர் இவற்றினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.