திருகோணமலை அன்புவழிபுர பிரதேசத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவரை கைதுசெய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரின் வீட்டில் அவர் வளர்த்து வந்த இரண்டு அடி நீளமான கஞ்சாசெடியும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 105 கிராம் கேரளா கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் அன்புவழிபுரத்தை வதிவிடமாக கொண்ட 30 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்டவரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் சட்ட நடவடிகைக்குட்படுத்தும் நோக்கத்தில் திருகோணமலை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.