கடந்த 28ம் திகதி யாழ்ப்பாணம் வந்த கோத்தபாயா மற்றும் மகிந்தவுக்கு யாழ் மேயரின் கட்டளையின் படி யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வண்டியும் அம்புலன்ஸ் வண்டியும் துணைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேயர் ரணிலின் வால்பிடியாக இருப்பவர். ரணில் தும்மினால் ஆனோல்ட்டுக்கே மூக்கால் சளி வரும் அளவுக்கு வால்பிடியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் துஸ்பிரயோகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் ஆனோல்ட் மட்டும் இவ்வாறு மகிந்த, கோத்தா ஆகியோருக்குப் பின்னால் அம்புலன்சையும், தீயணைப்பு வண்டியையும் திரியவிட்டது எதற்காக என்று அரசியல் அவதானிகள் கூர்ந்து கவனி்த்துள்ளார்கள்.
ஆனோல்ட்டின் கட்டளையின்படி ஆனோல்ட்டுக்கு கீழ் செயற்படும் இரண்டாம் நிலை அதிகாரியான துணை ஆணையாளரே இரு வாகனங்களையும் மகிந்தவுக்கு பின்னால் திரிய அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ரணிலின் வால்பிடியான ஆனோல்ட் மகிந்த, கோத்தாவுக்கு எதிராக ஏதாவது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் சதியை அறிந்திருந்தாரா?? அதனால் ஏதாவது அசம்பாவிதம் மகிந்த தரப்புக்கு கட்டாயம் வரும் என்று நம்பி அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்தை அனுப்பினாரா?? அல்லது மகிந்த ஆட்சிக்கு வந்தால் அவருக்கும் வால்பிடித்து நல்லபிள்ளை என்ற பெயரை தான் பெறலாம் என்று நினைத்தாரா? தேர்தல் திணைக்களம் தனது காலுக்கு கீழ் என்று நினைத்து செயற்பட்டாரா?? இவை எல்லாம் புரியாத புதிராக இருப்பதாக யாழ் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கோத்தா ஆட்சிக்கு வந்தால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்க வேண்டி வரும் என்ற காரணத்தால் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகாரிகளும் இவ்வாறான துஸ்பிரயோகத்தை கண்டு கொள்ளவில்லை போல் உள்ளது என ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.