இந்தியாவின் கேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் அவரால் வலிதாங்க முடியாமல் போனதையடுத்து இளைஞன் மருத்துவரை அனுகியுள்ளார்.
இதன்போது மருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் இளைஞனின் பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளமையை மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.
சமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.
இந்த நிலையில் அது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு வளர்ந்துள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞனுக்கு தீவிர சிகிச்சை அளித்து தற்பொழுது குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.