பிக்பாஸ் 3வது சீசன் சென்ற மாதம் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா அவரது குடும்பத்தினரோடு கலந்துகொண்டார்..
மேடையில் நின்று பேசிய லாஸ்லியாவின் அம்மா லாஸ்லியா குணம் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “லாஸ்லியாவின் இரண்டு தங்கைகளுக்கு அவர் இரண்டாவது அம்மா போன்றவர். யாருடைய உதவியும் இல்லாமல் தற்போது இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார். வீட்டில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அவரது ஆலோசனை கேட்டு தான் செய்வேன். அவர் எனக்கே அம்மாவை போன்றவர்” என லாஸ்லியாவின் அம்மா உருக்கமாக பேசினார்.
அதன் பிறகு பேசிய லாஸ்லியாவின் தங்கை, “பிக்பாஸ் முடிந்து லாஸ்லியா வீட்டுக்கு வந்தபிறகு நாங்கள் காலை 5 மணிக்கு தான் தூங்குவோம், அதுவரை பேசிக்கொண்டிருப்போம். அம்மாவிடம் கூட அதிகம் பேசமாட்டோம்” என கூறியுள்ளார்.