யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆண்கள் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துவபீட மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று, இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது, அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இந்நிலையில் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நண்பர்கள் பொலிஸாருக்கு தகவல் வழஙிய நிலையில் , மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரிவிக்கபட்டுகின்றது.
இதேவேளை பரீட்சை எழுத பலகலைகழக நிர்வாகம் சந்தர்ப்பம் அளிக்காமையின் காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மாணவன் கியூமனின் தற்கொலைக்கு பல்கலைகழகமே காரணம் என்றாலும் கூட, ஒரு பல்கலைகழக மருத்துவபீடத்தின் கடைசி ஆண்டுவரை சிறப்பாக கல்விகற்று வந்த மாணவன் இவ்வாறான ஒரு முடிவை தேடிக்கொண்டமை பலருக்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை வறிய குடும்பத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் எவ்வளவோ கஸ்ரங்களை தாண்டியே பல்கலைகழகம் வரை செல்வார்கள். எத்தனையோ கஸ்ரப்பட்டே அவர்கள் முன்னுக்கு வருவார்கள். அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகள் படித்துமுடிக்கும் வரை தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என ஆவலோடு காத்திருப்பார்கள்.
இந்நிலையில் இவ்வாறான முடிவுகளை மாணவர்கள் தேடும்பொழுது தங்களை மட்டுமல்லாது பெற்றோர்களையும் சேர்த்தே காயப்படுத்துகின்றார்கள்.
உளியிடம் அடிவாங்காமல் எந்த ஒரு கல்லும் சிற்பம் ஆவதில்லை. மனிதர்களின் வாழ்க்கையும் அதுபோலத்தான். கஸ்ரங்கள் இல்லாமல் வாழ்க்கையில் யாருமே ஜெயிப்பது கிடையாது.
கியூமன் எடுத்த முடிபோல இனியொருவரும் அவ்வாறான முடிவுக்கு செல்வதற்கு முன்னர் தங்கள் பெற்றோர்களை நினைத்து பார்த்தால் போதும். கோழைத்தனமான இவ்வாறான முடிவுகளை தேடிக்கொள்ளமாட்டார்கள்.