“இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு பெயர் சாணக்கியர் என்பதாகும்.
மிகசிறந்த ராஜதந்திரியாக, அரசியல் ஆலோசாகராக, பொருளாதார நிபுணராக, தத்துவ மேதையாக என சாணக்கியர் சிறந்தவராக விளங்கிய துறைகள் ஏராளம்.
தட்சசீல பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த சாணக்கியர் அனைத்து வேதங்களையும் கற்றறிந்த ஞானியாக விளங்கினார்.
சாணக்கியர் எழுதிய நூல்களில் சாணக்கிய நீதியும், அர்த்தசாஸ்திரமும் இன்றும் புகழ்பெற்று இருக்க காரணம் அவற்றில் கூறப்பட்டுள்ள எக்காலத்துக்கும் பொருந்தும் அதேசமயம் வாழ்க்கைக்கு தேவைப்படும் படி உள்ள கருத்துக்கள்தான்.
சாணக்கியர் எவ்வளவு சிறந்த புத்திசாலியாக இருந்தாலும் பெண்களைப் பற்றிய அவரின் கண்ணோட்டத்தில் பலருக்கும் பல மாறுபாடுகள் இருந்தது.
இந்த பதிவில் சாணக்கியர் பெண்களை பற்றி தனது நூல்களில் எப்படி குறிப்பிட்டுள்ளார் என்று பார்க்கலாம்.
சாணக்கிய நீதி
சாணக்கிய நீதியில் சாணக்கியர் பெண்களை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பெரும்பாலும் அவர்களை வஞ்சகத்தின் அடையாளமாகவும், தீமைகளின் உருவமாகவுமே உருவாக்கப்படுத்தியுள்ளார்.
மகாஞானியான சாணக்கியர் பெண்களை பற்றி ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முயலவில்லை என்பது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஆகும்.
அதேசமயம் சில இடங்களில் உயர்வாகவும் கூறியுள்ளார். சாணக்கியர் பெண்களை பற்றி கூறியுள்ள சில கருத்துக்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
நீதி 1
சாணக்கிய நீதியில் இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி என்னவெனில் அது பெண்ணின் இளமையும், அழகும்தான் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நீதி 2
பெண் ஆண்களை விட நான்கு மடங்கு கூச்ச சுபாவம் உடையவர்கள். அதேசமயம் ஆண்களை விட ஆறு மடங்கு துணிச்சல்மிக்கவர்கள். அதேசமயம் ஆண்களை விட பெண்களுக்கு 8 மடங்கு பாலியலில் ஆர்வம் இருக்கும்.
நீதி 3
உண்மையாவே சிறந்தவங்க இன்னொருவரின் மனைவியை தனது தாயாகவும், தனக்குச் சொந்தமில்லாத செல்வத்தைமண் எனவும், மற்ற எல்லா உயிரினங்களின் இன்பத்தையும் வேதனையையும் தன்னுடையது என்று கருதுபவர், உண்மையிலேயே விஷயங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நீதி 4
நெருப்பு, நீர், பெண்கள், முட்டாள்கள், பாம்புகள் மற்றும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு எதிராக இருக்கும்போது இவை அனைத்தும் உடனடியாக மரணத்தை ஏற்படுத்தும்.
நீதி 5
ஒரு மனிதனுக்கு அவனுக்குள் வலிமை இல்லாதபோது அவன் ஒரு சாதுவாக மாறுகிறான், செல்வம் இல்லாதவன் பிரம்மச்சாரியைப் போல செயல்படுகிறான், நோய்வாய்ப்பட்ட ஒரு மனிதன் இறைவனின் பக்தனைப் போல நடந்து கொள்கிறான், ஒரு பெண் வயதாகும்போது அவள் தன் கணவன் மீது பக்தி செலுத்த தொடங்குகிறாள்.
நீதி 6
நேர்மையின்மை, ஆரோக்கியமின்மை, தந்திரம், முட்டாள்தனம், பேராசை, தூய்மையின்மை, மற்றும் கொடூர எண்ணம். இந்த ஏழு குணங்கள்தான் பெண்களிடம் இருக்கும் இயற்கை குறைபாடுகள் ஆகும்.
நீதி7
ஆற்றங்கரையில் இருக்கும் மரங்கள், வேறொரு ஆணின் வீட்டில் இருக்கும் பெண், ஆலோசகர்கள் இல்லாத அரசர்கள் விரைவாக அழிந்து போவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
நீதி 8
பித்தளை சாம்பலால் மெருகூட்டப்படுகிறது, செம்பு புளியால் சுத்தம் செய்யப்படுகிறது; ஒரு பெண், அவளது மாதவிடாய் மூலமும், ஒரு நதி அதன் ஓட்டத்தாலும் மெருகூட்டப்படுகிறது.
நீதி 9
ஒரு அரசனின் சக்தி ஆவது வலிமையான புஜங்களில் உள்ளது, அவரது ஆன்மீக வலிமை பிராமணர் கையில் உள்ளது. அதேபோல ஒரு பெண்ணின் வலிமை அவளது இளமையிலும், அழகான சொற்களிலும் உள்ளது.
நீதி10
நடைமுறையில் செயல்படுத்தாவிட்டால் அறிவு இழக்கப்படுகிறது. மனிதன் அறியாமை காரணமாக அதனை இழக்கிறான், தளபதி இல்லாமல் இராணுவம் வீழ்கிறது. பெண் கணவன் இல்லாமல் இழக்கிறாள்.”