Loading...
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த இரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என்று, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான பரப்புரைக் கூட்டங்களை நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்க நெற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டங்களில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
Loading...
“எமது யோசனைகளுக்கு உடன்படும் கட்சிகள் தாமாகவே எங்கள் வேட்பாளருடன் இணைந்துள்ளன.
புதிய ஜனநாயக முன்னணி மட்டுமே தேசிய பிரச்சினைக்கு வடக்கிலும், தெற்கிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை வழங்கியுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...