பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவரது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் திடீர் என்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில் சந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.
பொலிசார் நடத்திய விசாரணையில் பெண்ணாக பிறந்ததால் வரதராஜன் ஏற்கனவே ஒரு முறை குழந்தையை கொல்லமுயன்றது தெரியவந்ததால் அவரைப்பிடித்து விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை கொன்று சடலத்தை புதைத்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரதராஜனை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.