ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்களின் சிறப்பு மாநாடு இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாடு கொழும்பில் உள்ள சுகததாச உட்புற மைதானத்தில் 2.00 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.க துணைத் தலைவர், எம்.பி. குமார வெல்கம மற்றும் பல ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை பெரமுனவுடன் கூட்டணியை உருவாக்குவதற்கு ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எடுத்த முடிவுக்கு எதிராக ஸ்ரீ.ல.சு.கவுடன் இணைந்த “நாங்கள் ஸ்ரீலங்கா” அமைப்பு ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின்யுடன் இணைந்த ஜனநாயக தேசிய முன்னணி உடன் சஜித் பிரேமதாசவை வெற்றி அடைய செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.