வெளிநாட்டில் இருந்த கேரள பெண் 9 ஆண்டுகளாக தாயை தேடிய நிலையில் அவர் கிடைத்த பின்னர் மனம் மாறியுள்ளார்.
இத்தாலியை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நவ்யா சோபியா. தற்போது 35 வயதாகும் இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இத்தாலியில் வசித்து வருகிறார்.
நவ்யாவின் சொந்த ஊர் கேரளாவின் கோழிக்கோடு. சிறுவயதிலேயே நவ்யாவை அவர் தாய் அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்.
இரண்டரை வயது வரை அங்கு நவ்யா இருந்த போது வயநாட்டுக்கு சுற்றுலா வந்த இத்தாலியை சேர்ந்த தம்பதி நவ்யாவை தத்தெடுத்து தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்றனர்.
எனினும் வளர வளர பெற்றோரின் நிறத்தை தான் ஏன் பெறவில்லை என நவ்யாவுக்கு சந்தேகம் வர அப்போது தான், தான் ஒரு தத்து குழந்தை என தெரியவந்தது.
ஆனால் நவ்யாவால் உடனடியாக கேரளாவுக்கு வந்து தாயை தேட முடியாத நிலையில் 9 வருடங்களுக்கு முன்பு கேரளா வந்து தாயைத் தேடியுள்ளார். ஆனால், நவ்யாவால் தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் சமூகவலைதளம் மூல தொடர்ந்து தேடிய நிலையில் அவரிம் 9 ஆண்டுகால தேடுதல் வேட்டை முடிவு வந்துள்ளது.
வயநாட்டுக்கு அருகே தங்கியிருக்கும் தன் தாயுடன் தொலைபேசியில் நவ்யா அவரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கேரளாவில் தாய் அமைதியான மற்றும் மனநிறைவான குடும்ப வாழ்க்கையை நடத்திவருகிறார் என்பதை அறிந்த பிறகு, நவ்யாவின் மனம் மாறியுள்ளது.
ஆம், நவ்யாவின் தாய் தனது கணவர் மற்றும் அவரது குழந்தைகளுடன் வேறு ஒரு குடும்ப வாழ்க்கையில் இருப்பதால், தனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது’ என்ற உறுதிமொழி வாங்கிய பிறகே நவ்யாவுடன் போனில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நவ்யா, திருமணத்துக்கு முன்பு என் அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பதை உலகம் அறிந்தால் அது அவருக்கு சங்கடத்தை கொடுக்கும்.
நான் விரைவில் கேரளா வருவேன், ஆனால் என் அம்மாவை சந்திக்க மாட்டேன், அதற்கு பதிலாக அவரை கண்டுபிடிக்க உதவியவர்களை சந்திப்பேன் என கூறியுள்ளார்