சீனாவில் 67 வயதான பெண் இயற்கையாக கருத்தரித்து மூன்றாவது குழந்தை பெற்ற நிலையில் அப்பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் அரசாங்கம் கடுமையான அபராதம் விதிக்கலாம் என தெரியவந்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங்கை சேர்ந்தவர் ஹீவாங் (68). இவர் மனைவி தியான் (67) மருத்துவர் ஆவார். இந்த தம்பதிக்கு 40 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் மூன்றாம் முறையாக தியான் கர்ப்பமான நிலையில் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த பிறகு மூத்த பிள்ளைகள் இருவரும் தாய் தந்தை வீட்டிற்கு செல்வதை நிறுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் அந்த குழந்தையின் பிறப்பால் சீனாவில் அரசியல் ரீதியிலான விவாதம் ஒன்றும் எழுந்துள்ளது.
அதாவது, இரண்டு குழந்தைகள் மட்டுமே ஒரு தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அங்குள்ள சட்டத்தை மீறி மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக அந்த தம்பதிக்கு கடுமையான அபராதத்தை விதிக்க அரசு யோசித்து வருகிறது. இது குறித்து ஹீவாங் கூறுகையில், 49 வயது வரையிலான பெண்களுக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு பொருந்தும், ஆனால் என் மனைவிக்கு 67 வயதாகிவிட்டதால் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.