ஆப்பிரிக்காவில் பணிபுரியும் போது இரண்டு மிஷனரி கன்னியாஸ்திரிகள் கர்ப்பமாகிவிட்ட சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இத்தாலியா நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், தொண்டு பணியின் ஒரு பகுதியாக தங்கள் சொந்த கண்டமான ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 34 வயதான கன்னியாஸ்திரி ஒருவர் சமீபத்தில் வயிற்று வலியுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது, கர்பமடைந்திருப்பது தெரியவந்தது.
அதேபோல மடகாஸ்கரைச் சேர்ந்த மூத்த கன்னியாஸ்திரி ஒருவர் பல வார கர்ப்பிணியாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு கன்னியாஸ்திரிகளும் இப்போது மத வாழ்க்கையிலிருந்து விலகுவதற்கான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவமானது பாதிரியார்கள் மத்தியில் ‘பெரும் கலக்கத்தை’ ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரோமில் உள்ள ஒரு தேவாலய நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில், இரு கன்னியாஸ்திரிகளும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பியிருந்த போது, வெளிப்படையாக ஒருவித பாலியல் சந்திப்பைக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கற்புக்கான கடுமையான விதிகளை மீறியுள்ளனர். ஆனால் அவர்களின் குழந்தைகளின் நலன் மிக உயர்ந்தது என்பதால் அவர்கள் தங்கள் மத சேவையை விட்டு வெளியேறுவார்கள்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவர் ரகுசாவிலும், மற்றவர் 40 மைல்களுக்கும் குறைவான மிலிடெல்லோவிலும் வசித்து வருகிறார்கள் என கூறியுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் சில கன்னியாஸ்திரிகள் மதகுருக்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.