பிரித்தானிய தாயார் ஒருவர் இளைஞருடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய சில மணி நேரத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பிராட்போர்டு பகுதியை சேர்ந்த இளம் தாயார் 26 வயது Levi Ogden என்பவர் சமூக வலைதளம் ஒன்றில் அறிமுகமான Lloyd Birkby என்பவருடன் இரவு உணவுக்காக வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் இருவரும் ஒன்றாக பதிவு செய்துகொண்ட புகைப்படங்கள் சிலவற்றை Levi Ogden தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியான 6 மணி நேரத்தில் 2 பிள்ளைகளின் தாயாரான Levi Ogden உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் 26 வயதுடைய Lloyd Birkby கைதாகியுள்ளார். இருவரும் இடையேயான கைகலப்பில் குறித்த இளம் தாயார் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், குறித்த இளைஞரை இன்றைய தினம் பிராட்போர்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.
Lloyd Birkby மீது மேலும் இருவரை தாக்கியதாகவும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Lloyd Birkby மற்றும் Levi Ogden ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அதை நேரில் பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு சாட்சியம் அளிக்க முன்வர வேண்டும் என அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.